வாஸ்துவில் செடிகள் மற்றும் மரங்களின் பங்கு !!!

நான் பலதரப்பட்ட மக்களுக்கு வாஸ்து ஆலோசணை வழங்கியிருக்கிறேன். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமான சந்தேகங்களை கேட்பார்கள்,குறிப்பிட்ட சில மாதங்களில் ஒரே விதமான சந்தேகங்களை வாடிக்கையாளர்கள் கேட்பார்கள்.


vasthuplant

ஏன் குறிப்பிட்ட சில மாதங்கள் குறிப்பிட்ட சந்தேகங்களை கேட்கிறார் என்று பார்த்தால் , அதற்க்கு பின்னே சமூக ஊடகங்களில் வரும் வைரல் செய்திகளே காரணம் என்பதை அறியலாம்.

வாஸ்துவை அறிவியல் ரீதியாக அணுகும் போக்கு இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை என்பது மட்டுமே தெள்ள தெளிவாக தெரிகிறது..

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  கிரகணங்களையும் கோள்களின் நகர்வுகளை கண்டறிந்த மாபெரும் சித்தர்கள் பிறந்த இந்த மண்ணில் மூடநம்பிக்கைகளை நம்பு போக்குதான் இருக்கிறது.

ஒரு சொல்லாடை உள்ளது " பொய் பறக்கும்! உண்மை நடக்கும்!  " 

என்று கூற்றிக்கு ஏற்ப இப்போதெல்லாம் வைரல் செய்திகளாக ரீல்ஸ், சார்ட் ஸில் வருவதையே நம்புகிறார்கள்.

எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதை பகுத்து ஆய்வு செய்யாமல் நம்புவது அடுத்த தலைமுறையினருக்கு  நாம் செய்யும் துரோகமே!

இவ்வளவு நீண்ட அறிவுறை கொடுக்கும் அளவிற்க்கு மக்கள் மீது உங்களுக்கு என்ன கோபம் என்கிறீர்களா?

ஒரு வேற்று மத வாடிக்கையாளர் வீட்டிற்க்கு வாஸ்து பார்க்க சென்றேன் .

அப்போது அந்த குடும்பதலைவி என்னிடம் கேள்வி கேட்டார்..


சார் ! மருதாணி கைகளுக்கு வைத்தால் ஆறு நாட்களுக்கு மரணம் நெருங்காது என ஒரு ஜோசியர் Youtube சொன்னார் இது உண்மையா?

இப்ப சொல்லுங்க மருதாணி வைத்தால் மரணம் நெருங்காது என்றாலே நாம் எல்லோரும் மரணமே வரவாய்ப்பில்லை.

வீட்டுக்கு ஒரு மருதாணி செடி வைத்து 5 நாட்களுக்கு ஒரு முறை மருதானி வைத்து கொள்வோமே .மருத்துவமணைகளில் கூட அவசர சிகிச்சை பிரிவுகளில் மருதாணியை வைத்து உயிரை காப்பாற்றி அனுப்பிவிடுவார்களே!

இன்னொரு வாடிக்கையாளர் கேட்ட சந்தேகம் சார்!  தொட்டா சினுங்கி செடி வீட்டில் வளர்த்தால் கோடீஷ்வரனாகிடலாம் சொல்றாங்க அதை எங்கு வைப்பது.

இதை யார் சொன்னார்கள் என்று கேட்டால் Youtube ல் பார்த்தேன் சொன்னாங்க.

இதைவிட முட்டாள்தனமான மூடநம்பிக்கை எங்கும் இல்லை.

இது உண்மை என்றால் இது சொன்னவர் முதலில் கோடீஸ்வரனாகியிருக்கனுமே ..அவர் ஏன் ஆகவில்லை என்று யாரும் யோசிக்கவில்லை.

சில அறிவார்ந்த மக்கள் இது சுத்த பொய் என தெரிந்து கொள்வார்கள். கல்வியறிவு இல்லாதவர்கள் இதை நம்பி ஏமாறுவார்கள்.

அது மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் பெரும்பாலும் மக்களை தற்சார்ப்பு வாழ்க்கையை வாழ விடமால் எதிர்பார்பு உள்ள வாழ்க்கைக்கு தள்ளிவிடுவதாக உள்ளது.

ஒரு வீட்டை சுற்றி இந்த செடிகள் வைத்தால் உங்க வீட்டில் இந்த பிரட்ச்சினை வரும் ..வாழை மரம் வைத்தால் கேன்சர் வரும் ,வல்லாறை செடி வைத்தால் தற்கொலை நடக்கும் என வாய்க்கு வந்தப்படி சில வாஸ்து நிபுனர்கள் சொல்லி வருவதை பார்த்தால் ..இவர்களெல்லாம் மக்களை வாழவே விடமாட்டார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.


ஒரு வீட்டில் வைக்கும் செடிகளில் முக்கியமானவை :

1) துளிசி செடி 

2) கற்பூரவள்ளி செடி 

3) கற்றாலை செடி 

4) வெற்றிலை கொடி 

5) பூ செடிகள் 


மேற்கண்ட செடிகள் வீட்டின் வடக்கு மத்தியில் இருந்து தென்கிழக்கு வரை வைத்துக்கொள்ளலாம்.


மேற்கண்ட செடிகளில் துளிசி, கற்பூரவள்ளி, வெற்றிலை கொடி இந்த செடிகளில் அதிகமான ஆக்ஸிஜன் நிறைந்துள்ளது.எனவே அதிகாலை பொழுதில் சூரிய உதயத்தின் போது வரும் சூரிய கதிர்களும் மற்றும் அவ்வேளையில் வரும் சுத்தமான காற்றும் இந்த செடிகளிலிருந்து வெளிப்படும் ஆக்ஸிஜனும் சேர்ந்து வீட்டிற்க்கு வரும் இதுவே நேர்மறை ஆற்றல் என்கிறோம்.இதை ஆன்மீகவாதிகள் இறை ஆற்றல் என்கிறார்கள்.இது அந்த வீட்டில் வாழுப்பவர்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.


மேலும் இந்த செடிகள் அதிக மருத்துவ பயன்கொண்டவைகள்.

சளி, இருமல், சுவாச கோளாறு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.

மேற்கண்ட நோய்களுக்கு இதிலிருந்தே மருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்த செடிகளில் வெற்றிலை மட்டுமே கொடியாக பரவும் இதனை வடக்கு மற்றும் கிழக்கு ஜன்னல்களில் பரவ விடாமல், வடக்கு மற்றும் கிழக்கு சுற்று சுவரில் படரவிடுவது சிறப்பு.

கற்றாலை செடி 

கற்றாலை காற்றிலிருக்கும் கொடிய விசங்களை முறிக்கும் தன்மையுடையது.

கற்றாலையில் பிசின் போன்ற ஜெல் உடலின் மேல் புறத்திற்க்கும் உட்புறத்திற்க்கும் பயன்படும்.

உடலில் மேட்புறத்தில் ஏற்படும் புண் மற்றும் தோல் நோயிக்களுக்கும்.

உடலின் உட்புறமான குடலில் ஏற்படும் புண் மற்றும் கிருமிகளை அகற்றும் தன்மை வாய்ந்தது.

கற்றாலையிலிருந்துதான் பல அரிய மருந்துகள் தயாரிக்கப்படுகிறது .

இந்த செடி நோய் எதிர்ப்பு சத்து நிறைந்தது.

எனவே தான் ஒரு வீட்டில் துளசி, கற்பூரவள்ளி, வெற்றிலை, கற்றாழை இருப்பது மிக அவசியம் என்கிறேன்.

எந்த ஒரு செடியும் வடக்கு மற்றும் கிழக்கு ஜன்னல்களை மறைக்கும் அளவிற்க்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

வீட்டில் வைக்க கூடிய மரங்களில் முக்கியமானவை 

1) வாழை மரம் 

2) மருதாணி செடி  ( பெரிதாக வளரும்)

3) அசோக மரம் 

4) நெட்டிலிங்க மரம் 

5) மகிழ மரம் 

6) தென்னைமரம் 

7) மாமரம் 

8) சப்போட்டா 


பொதுவாக சிலர் வாழைமரம் வைத்தால் கேன்சர் வரும் தென்னை மரம் வைத்தால் புத்திர தோசம் என கட்டுகதைகளை சொல்லி வருகிறார்கள்.

ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள் ஒரு வீட்டில் வசிப்பவர்கள் கேன்சர் போன்று கடுமையான நோய் வருகிறது என்றால் அதற்க்கு மிக முக்கிய காரணம் தவறான இடத்தில் அமைக்கப்பட்ட செப்டிக் டேங்க், கழிவறை, தெருகுத்து 

இவையே கடுமையான நோயை தரும்.

பொதுவாகவே மரங்களை எந்த திசைகளில் வைக்க வேண்டும் என்பதில்தான் வாஸ்துவில் முக்கியம்.

பெரும்பாலும் இப்போதைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் மரங்கள் வைப்பதற்கான இடங்கள் இருப்பதில்லை.

எனவே மரங்கள் வைப்பதற்கான இடங்கள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட சில திசைகளில் மட்டுமே வைக்க வேண்டும்.

மரங்களை பொருத்தவரை படர்ந்து விரிந்து வளரும் .எனவே மரங்களை வடக்கு மத்திய பாகத்திலிருந்து தென்கிக்கு கிழக்கு பாகம் வரை வைத்தல் கூடாது.

ஏன்னெனில் காலை சூரிய வெளிச்சம் இவை தடுக்கும் என்பதால் மேற்கண்ட திசைகளில் இவை அமைக்க கூடாது.


தெற்கு மத்திய பாகத்திலிருந்து வடமேற்கு வடக்கு பாகம் வரை மரங்களை வைக்கலாம்.

மேற்கண்ட மரங்கள் அனைத்தும் நம் வாழ்வியலுக்கு மிகுந்த உகந்த மரங்களாகும்.

மரங்கள் எப்பபோதும் காற்றில் உள்ள மாசுவை இழுத்து சுத்தமான காற்றை நமக்கு தரும்.இவ்வகையில் காற்றை சுத்திகரிப்பு செய்வதில் மிக முக்கிய பங்கு மரங்களுக்கு உண்டு.

வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழை பூ, வாழை பழம், இழை, வாழை தண்டு இது அனைத்துமே மனிதனுக்கு தேவைப்படகூடியது.

இதில் வாழைத்தண்டு உணவு  மனிதன் சிறுநீரகத்தை சுத்தி செய்வதில் முக்கிய பங்கு உண்டு.

அசோக மரம், நெட்டிலிங்க மரத்திலிருந்து வரும் பிசின் மூலமாக பெண்களின் கர்ப்பைக்கு மருந்து எடுப்பதாக கூறப்படுகிறது.அதிலிருந்து வரும் ஆக்ஸிஜன் பெண்கள் சுவாசிக்கும் போது கர்ப்பைக்கு சக்தி கிடைக்கிறது என்கிறார்கள்.

இதனால்தான் சோகத்தை போக்கும் அசோக மரம் என்றும்.

மகிழ்ச்சியை தரும் மகழம் மரம் என்றும் கூறுவார்கள்.

மருதாணி செடி உடல் சூட்டை தணிக்கும்.தலை முடி கருமையாக வளர முக்கியம் வாய்ந்தது.

எனவே மேற்கண்ட செடிகள் மற்றும் மரங்கள் எங்கு வைத்தால் நமக்கு நன்மை என்பதனை எனக்கு தெரிந்த அறிவியல் கண்ணோட்டத்தில் சொல்லியிருக்கிறேன்.

நான் கூறிய செடிகளும் மரங்களும் மனிதனின்  தற்சார்ப்பு வாழ்க்கைக்கு மிக உகந்தது என்பதை இப்போது அறிந்திருப்பீர்கள்.

மேற்கண்ட செடிகளோ மரங்களோ நான் சொன்ன திசைகளில் வைப்பது மட்டுமே போதாது, வீட்டின் கட்டமைப்புகள் அனைத்தும் வாஸ்து படி இருப்பதே முக்கியம்.

இதில் நான் சொல்வதெல்லாம் உங்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, மரம் மற்றும்  செடிகள் வைப்பது பற்றிய எந்த தகவலாக இருந்தாலும் பகுந்து ஆய்வு செய்து ஒரு முடிவெடுங்கள்.

மீண்டும் இதுப்போன்ற அடுத்த ஒரு பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.